/ பொது / Lets Help ourselves: vol1
Lets Help ourselves: vol1
நாட்டில் மொத்தம் இரண்டு லட்சம் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக அரசு கணக்கு காட்டுகிறது. பல தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு ஏராளமான நற்பணிகள் ஆற்றுகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களை எப்படி துவக்குவது என்பதற்கான ஆலோசனைகளைப் பெற பலர் தவிக்கின்றனர். அத்தவிப்பை நீக்க வசதியாக ஆயிரம் பக்கங்களில் ஆங்கிலத்தில் எல்லா தகவல்களையும் உள்ளடக்கியது இந்த நூல். தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் சர்வதேச அமைப்புகள் முழு விலாசம், தொடர்பு முகவரி, தொண்டு நிறுவனங்கள் துவங்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய விவரங்கள் எல்லாமே சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன. இத்துறையில் சிறந்த அனுபவம் உள்ள ஆசிரியர் இதைத் திரட்டி நூலாக்க பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.