/ ஆன்மிகம் / மடப்புரத்து காளி

₹ 200

தனித்துவ கதை அம்சத்தோடு படைக்கப்பட்ட குறு நாவல்களின் தொகுப்பு நுால். முதல் கதை மடப்புரத்து காளி பற்றிய தகவல்களுடன் நீள்கிறது. காளி குறித்த விபரங்களும், அதை வணங்கும் குடும்பத்தில் ஏற்பட்ட அனுபவமும் மையக் கருவாக உள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையை தீர்த்து வைக்கும் குலதெய்வமாக, அநியாயம் செய்பவருக்கு தண்டனை தருவதை உணர்ச்சி மயமாக விவரிக்கிறது. அடுத்த கதை சாத்வீகமாய் இல்லாமல், தன்னிச்சையான அறிவின் வடிவத்தை கொண்டு இருக்கும் நீலசரஸ்வதி பற்றியது. தந்திர மரபுகளில் சக்தி வாய்ந்த வடிவமாக கருதப்படுகிறாள். விதி, மதி விளக்கி மந்திரங்களின் மகிமை மற்றும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. குடும்ப சாபத்திற்கு பரிகாரம் தருவதாக எடுத்துரைக்கும் கதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி