/ சிறுவர்கள் பகுதி / மெய்யெழுத்துப் புதிர்கள்!
மெய்யெழுத்துப் புதிர்கள்!
மெய்யெழுத்துகளை கண்டறிவதற்கான 100 புதிர்களை தொகுத்து தரும் நுால். கொடுக்கப்பட்ட சொற்களில் மெய் எழுத்துகள் விடுபட்டுள்ளன. குறிப்புகளை கொண்டு விடையை கண்டறிதல் வேண்டும். விடைகளில் மெய்யெழுத்துகள் விடுபட்டுள்ளன. விடுபட்ட மெய் எழுத்துகளை கண்டுபிடித்து புதிர்களை விடுவிக்க வேண்டும். பிறங்கல், ஊங்கணோர், நுணல், மஞ்ஞை, வேட்டகம், சேல், தண்டுலம், தரங்கம், புக்ககம், யாய், பேம், பாயல் போன்ற வழக்கில் இல்லாத இலக்கிய வழக்கு சொற்கள் விடையாக தரப்பட்டுள்ளன. பயனுள்ள பொழுதுபோக்காக அமைந்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்