/ இசை, இயல், நாடகம் / மறக்கமுடியுமா! (பாகம் – 2)
மறக்கமுடியுமா! (பாகம் – 2)
நடிகர் மோகனின் உதயகீதம் துவங்கி வெற்றி வாகை சூடிய, 100 திரைப்பட குறிப்புகள் இடம் பெற்றுள்ள நுால். கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில், வீட்டிலிருந்தபடியே பழைய நினைவுகளை அசை போடும் வகையில் எழுதப்பட்ட திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. திரைப்படம் வெளியான ஆண்டு, நடித்த முக்கிய நடிகர்கள், இயக்குனர், இசையமைப்பாளர், மனம் கவர்ந்த பாடல்கள் என பல விஷயங்களும் சிரமப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. திரைப்படத் துறையினர், திரை விரும்பிகள் கையில் இருந்தால், எல்லா கேள்விகளுக்கும் சிரமமின்றி பதில் சொல்லலாம். இந்த படங்களை பார்த்த நினைவுகளையும் அசை போடலாம்.– தி.செல்லப்பா




