/ வரலாறு / மறவர் சீமை பத்தினி பர்வதவர்த்தினி நாச்சியார்

₹ 200

சேதுபதி மன்னர் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை உணர்வுப்பூர்வமான வரலாற்று நுாலாக ஆசிரியர் படைத்துள்ளார். வளரி ஆயுதத்திற்கும், திபெத்திய புத்த பிட்சுகள் பயன்படுத்திய குஹூரு ஆயுதமும் ஒத்துப்போகிறது என்ற தகவல் புதுமையாக உள்ளது. பர்வதவர்த்தினி நாச்சியாரின் திருமணம் தொடர்பான அத்தியாயத்தில், அக்கால சடங்கு, சம்பிரதாயங்கள் விரிவாகவும், சுவாரஸ்யம் குறையாமலும் சொல்லப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் திருத்தலம் தோன்றி 4 கோடி ஆண்டுகள் ஆகிறது போன்ற ஆச்சரியமூட்டும் தகவல்களை ஆங்காங்கே துாவியிருக்கிறார் ஆசிரியர் பாலகிருஷ்ணன். நயினார்கோவில் ஊருக்கான பெயர்க்காரணம் அறியும்போது அக்கால மனிதர்களின் மதநல்லிணக்கம் தெரியவருகிறது. வரலாற்று ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நுால்! – ரெங்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை