/ கதைகள் / மதிப்புறு மதிப்பீட்டுக் கதைகள்
மதிப்புறு மதிப்பீட்டுக் கதைகள்
சிறுவர்கள் மனதில் பதித்து கொள்ளும் விதமாக எளிய நடையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஜென் துறவியை சோதிக்க வந்த இளைஞனுக்கு எப்படி அருமையான பாடம் புகட்டினார் என்பதே ‘காலி கோப்பை’ சிறுகதை. மேலாக இருப்பதை விட பிறர் வாழ்வுக்கு வேராக இருப்போம் என்பது, ‘ரோஜா செடி’ வழியாக உணர்த்தப்பட்டுள்ளது. அறிவுடன் கூடிய உடனடி முயற்சி தான் பலனை தரும், இல்லையெனில் வீண் என்பதை எடுத்துக்காட்டுகிறது, ‘காலம் கடந்த முயற்சி’ சிறுகதை. சிறு அலட்சியமே பெரிய தவறுக்கு வழி வகுக்கும் என்பதை சுவைபட எடுத்து கூறுகிறது ஒரு கதை. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் வருத்தமே நேரிடும் என்பதை கச்சிதமாய் சொல்லும் கதைகளின் தொகுப்பு நுால்.– டாக்டர் கார்முகிலோன்