/ கதைகள் / மயில் போட்ட கணக்கு
மயில் போட்ட கணக்கு
சிறுவருக்கு அறிவு ஊட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உயிரினங்களிடம் அன்பு காட்டும் பண்பை வளர்க்கும். எந்தச் செடியை நட்டாலும் பயிரானால் உணவு, பட்டுப் போனால் உரம் என்னும் கருத்தை எளிமையாக விளக்குகிறது. யாரை நம்புவது என தெரியாமல் திட்டம் போட்ட மயில் அழித்துக் கொண்டதை, மயில் போட்ட கணக்கு கதை எடுத்துச் சொல்கிறது. தாத்தா, பேரன், அம்மா, மயில், நரி என மனிதர்களும், விலங்குகளும் சேர்ந்து பயணிப்பது சுவாரசியம். சிறுவர் இலக்கியத்தில் ஒளி வீசும் நுால்.– முகிலை ராசபாண்டியன்