/ புத்தக மதிப்புரை / மழைநீரில் மறைந்து தெளியும் தடங்கள்
மழைநீரில் மறைந்து தெளியும் தடங்கள்
காதல், நிலையாமை, பொறுமை, ஏக்கம், நினைவுகள், இயற்கை நிகழ்வுகள், உண்மைகள், பிரிவு, துன்பம், மகிழ்ச்சி, பிற உயிர்கள் மீதான பாசம் என அனைத்தையும் ஒரே கவிதை நூலில் கொண்டுவர முடியும் என்ற முயற்சியை இக்கவிதை நூலில் நிகழ்த்தியுள்ளார் ஆசிரியர். எளிய நடையில் உள்ள இவரது கவிதைகள் வாசிக்கப்படுவதற்காக மட்டுமின்றி அனுபவிக்கப்படுவதற்காக உருவானவை. ஒவ்வொரு வரியும் சிந்தனையை தூண்டுகிறது. ஒவ்வொரு உருவகமும் உணர்வை எழுப்புகிறது. – சிவசு




