/ மருத்துவம் / மண் வாசனையுடன் மனநலச் சிகிச்சை
மண் வாசனையுடன் மனநலச் சிகிச்சை
தமிழக கலாசாரப் பின்னணியுடன் மனநலத்தைப் பாதுகாக்கும் நடைமுறையை வகுத்து தரும் நுால். மனநலம், மனநலக் கோளாறுகளை கண்டறிதல், மனநலக் கோளாறுகளின் வகைகள், மனநலக் கோளாறுகளும் மருத்துவமும், தமிழ்க் கலாசாரத்துக்கு ஏற்ற எளிய மனநலச் சிகிச்சை முறைகள் என்ற தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத் தகவல்களின் பின்னணியில் மனம் என்பதன் பொருள் அலசப்பட்டுள்ளது. தமிழர் பண்பாட்டில் மன உறுதியை ஏற்படுத்தும் செயல்முறைகள், விளையாட்டுகள் பற்றிய விபரங்களை எடுத்துரைக்கிறது. அவற்றை மனநலத்துக்கான எளிய சிகிச்சை முறையாக முன்வைப்பதன் வழியாக நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மனநலத்தைப் பேண புதிய அணுகுமுறையில் வழிகாட்டும் நுால். – ராம்




