/ கட்டுரைகள் / முடியாது என்பது கிடையாது

₹ 130

தன்னம்பிக்கை கருத்துகளை மனதில் பதிய வைக்கும் நுால். வாழ்வியல் சார்ந்து, 54 கட்டுரைகள் உள்ளன. ‘வாழ்க்கையில் முடியாதது ஒன்று இல்லை; முயன்றால் அனைத்தும் முடியும்’ என கூறுகிறது. முடியாது என முயலாமல் விட்டிருந்தால் பல கண்டுபிடிப்புகள் உலகுக்கு கிடைத்திருக்காது என்கிறது. திறமை, அறிவு, ஆற்றல், அனுபவம் இருக்கும்போது எப்படி முடியாமல் போகும் என கேள்வி எழுப்புகிறது. நீண்ட பயணத்தில் இடையில் பல இடங்களில் நின்று செல்வது போல் வாழ்வில் தடைகள் எல்லாம் இடையூறுகள் அல்ல; தற்காலிகமானவை. அவை என்றும் நீடித்து இருக்காது என அறிவூட்டுகிறது. சாதிக்க நினைப்போர், பிடிவாதத்தை அகற்றி சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு கூறுகிறது. தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல நுால். – வி.ராமலிங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை