/ கதைகள் / முல்லா கதைகள்

₹ 100

துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் முல்லா நஸ்ருதீன் கதைகளின் தொகுப்பு நுால். இதில் 19 ருசிகர கதைகள் இடம்பெற்றுள்ளன. எப்போதும் ஒட்டுக்கேட்டு தொந்தரவு செய்த பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு பாடம் புகட்டியதில் துவங்குகிறது. இலவசம் வேண்டாமென மன்னனுக்கே அறிவுரை தந்த புத்திக் கூர்மையை மற்றொரு கதை சுவைபட சொல்கிறது. பட்டத்து யானை அட்டகாசத்தை பக்குவமாய் அடக்கியதை மெச்சுகிறது. மோசடி செய்ய எண்ணியவனை, முல்லா எப்படி மடக்கினார் என்பது இன்னொரு கதையாக உள்ளது. தலையில் விழுந்த பழம் என்பது நீதி போதனை கதை. உடைவாளின் உபயோகத்தை, முல்லா எப்படி தெரிந்து வைத்திருந்தார் என்பது வேடிக்கை கதை. முல்லாவின் அருமை பெருமைகளை வெளிப்படுத்தும் கதைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை