/ வரலாறு / முத்தமிழ் மதுரை
முத்தமிழ் மதுரை
மதுரை மாநகரின் தொன்மை, பெருமை கூறும் நுால். மதுரை, வஞ்சி, உறையூர், புகார் என்ற நகரங்களின் பெருமையை கூறி, மதுரையின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி உள்ளவரை மதுரை புகழ் நிலைபெறும் என்கிறது. தற்போதுள்ள மதுரையில், கடைச்சங்கம் தோன்றிய-தாக கூறுகிறது. கன்னி, கரியமால், காளி, திருவால வாய்த் தரும்மூர்த்தி என்ற தெய்வங்கள் மதுரையைக் காத்து வருவது குறித்து கூறப்பட்டுள்ளது. பவுத்தம், சமண மதத்தவர் மதுரையை விரும்பியதையும், சீனப்பயணி யுவாங்சுவாங் புகழுரையும் கூறப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து