/ புத்தக மதிப்புரை / முதியோர் நலன் - (உணவு முறை -வாழ்க்கை முறை)

₹ 60

முதுமை பருவத்தில் மகிழ்வுடன் வாழ ஆலோசனை தரும் நுால். முதியோருக்கு நடை பயிற்சி அவசியம் என்பதை எடுத்துரைக்கிறது. முதியோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோய் தீர்த்தல் மட்டுமல்லாது மறுவாழ்வு அளிப்பதாக இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. புகை பிடித்தல், மது, முதியோருக்கு ஆபத்தானவை என எச்சரிக்கிறது. மருத்துவ பரிசோதனையை தவறாமல் செய்து கொள்வது, நோய் வருவதை முன்கூட்டியே தடுக்கும் வழிமுறைகளை எடுத்துக்காட்டுகிறது. வயோதிகத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் வழிமுறைகளை விவரிக்கிறது. இந்தியாவில் முதியோர் இல்லங்கள் வேகமாக பெருகி வருவதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. முதியோர் நலனுக்கு வழிகாட்டும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை