முயற்சி திருவினையாக்கும்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 482) இந்தியாவில் உள்ள சிறந்த, உயர்ந்த கல்விக் கூடமாக அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்.ஏ.,வைச் சொல்வார்கள். இங்கு கல்வி பயிலும் வாய்ப்பு தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே கிட்டும். இங்கு படித்துத் தேறிய பலர் சொந்தமாகத் தொழில் தொடங்கி அபார சாதனை செய்தவர்களும் உண்டு. ஐ.ஐ.எம்.ஏ.,வின் படித்து முடித்து விட்டு வெளியே வந்து அபார சாதனை நிகழ்த்திய 25 நபர்களை நேரில் சென்று நேர்காணல் செய்து ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில், STAY HUNGRY STAY FOOLISH என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார். இந்த நூல் ஆங்கிலத்தில் பெற்ற வரவேற்பைக் கவனித்த பலர், இதை பிற இந்தி மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட முன் வந்தனர் விகடன் பிரசுரத்தார். 25 வெற்றியாளர்களின் வாழ்க்கை அனுபவம் வித்தியாசமானது; சுவாரஸ்யமானது. அவர்கள் எதிர்கொண்ட சவால்களும், எடுத்த "ரிஸ்க்களும் தொழிலில் சந்தித்த ஏற்ற இறக்கங்கங்களும், பின்னர் பெற்ற வெற்றிகளும் வாசிப்பவர்களின் நெஞ்சை நெகிழ்ச்சியூட்டி ஆச்சர்யப்பட வைக்கின்றன. ரவி பிரகாஷின் மொழி பெயர்ப்பு சிறப்பாக உள்ளது. ஒரு வெற்றியாளரைப் படித்து முடித்தவுடன் நம் முன் பல சலனங்களும் அதிர்வுகளும் தோன்றி மேல் எழுகின்றன. அந்தச் சாதனையாளர்களின் சவால் நிறைந்த உலகம் படித்துப் பார்த்து உணர வேண்டிவை.