/ கவிதைகள் / நாடு போற்றும் மாண்பாளர் நல்லி குப்புசாமி

₹ 300

தொழிலதிபர் நல்லி குப்புசாமியை போற்றும் கவிதை நுால். எட்டு திசையும் இலக்கியம் வளர்ப்பது, பட்டுத் துணி விற்பனையில் வணிக மேதை என்பதை வெண்பா யாப்பில் அந்தமான் புலவர் பாடல் வழியாகச் சொல்கிறது. பனை மர விதை பெரிது; ஆயினும் அந்த மரத்தின் நிழல் உதவாது; ஆல மர விதை சிறியது என்றாலும், அதன் நிழலில் யானை, குதிரை படைகள் இளைப்பாறுவது போல் பயன்படும் வள்ளல் என புகழ்கிறது. மெல்லிய புன்னகை, அகத்தில் அன்பு, பேச்சில் மென்மை, தெளிவு, எளிமை மிக்க வாழ்க்கை என வார்த்தையில் சித்திரம் வரைகிறது. பட்டு வணிகருக்கு சூட்டும் இனிய பாட்டு மகுடமாக மலர்ந்துள்ள நுால். – முனைவர் மா.கி.ரமணன்


புதிய வீடியோ