/ கட்டுரைகள் / நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
வாழ்வின் இக்கட்டான நிலையிலும் நல்லதையே எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நுால். நல்லது நடக்க சமநிலை மாறாத மனம், பொறுமை, புன்னகை, தவறுகளில் இருந்து பாடம் கற்பது முக்கியம். விவாதத்தை தவிர்ப்பது, மன்னிப்பது நகைச்சுவை உணர்வு, இலக்கை தெளிவாக்கிக் கொள்வதும் முக்கியம். இது போன்ற குணநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சொற்பொழிவுகள் வலியுறுத்துகின்றன. இதை நேயர்களும், வாசகர்களும் விரும்பியதன்படி அச்சு வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. படிப்போர் மனதில் நல்ல எண்ணங்கள் நிரந்தரமாக குடியேற வைக்கும். நம்பிக்கையை ஏற்படுத்தி முன்னேற துாண்டும் நுால். – தி.செல்லப்பா




