/ கட்டடம் / நத்தம் நிலவரித் திட்டம்

₹ 200

தமிழகத்தில் நத்தம் நிலப்பிரிவு பற்றிய தகவல்களை தரும் நுால். இந்த வகை நிலத்தை அறிமுகம் செய்து, அதன் வரலாறு, பயன்பாட்டு முறைகளை தெரிவிக்கிறது.நத்தம் நிலத்தை முறைப்படுத்த அரசு பிறப்பித்த ஆணையுடன் துவங்குகிறது. நிலத்தை அளவீடு செய்தது குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் நில வகைப்பாடு பற்றிய விபரங்களையும் தெரிவிக்கிறது.கிராம நத்த நிலங்களின் நிலை, அவற்றுக்கு பட்டா கிடைக்குமா... அந்த நிலத்தை எப்படி பயன்படுத்துவது; அதற்கான அரசாணைகள் என்ன என்பதை தெளிவாக தருகிறது. சிறிய தலைப்புகளில் தகவல்கள் கச்சிதமாக தொகுக்கப்பட்டுள்ளன. நேரடியாக பேசுவது போல் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. தமிழக நில வகை பற்றி அறிய உதவும் நுால்.– ராம்


புதிய வீடியோ