/ கதைகள் / நெஞ்சோடு கலந்திடு

₹ 150

மனித வாழ்வில் நடக்கும் அனைத்தையும் பற்றி கூறுகிறது, ‘நெஞ்சோடு கலந்திடு’ என்ற சிறுகதைத் தொகுப்பு நுால். இதில் உள்ள, 10 சிறுகதைகள் சிறுவயது முதல் வயது முதிர்வு வரை உள்ள காலகட்டத்தில் நடப்பதை சித்தரிக்கிறது. சில புது பாடலோடு சேர்த்து, பழைய நினைவுகளில் ஆழ்த்தி மனதை பக்குவப்படுத்துவதாக உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை புரிந்து கொள்ளும் வகையில் கதைக்கருவை கொண்டுள்ளது. பாத்திரங்கள் அதற்குள் படைக்கப்பட்டுள்ளன. சில சம்பவங்களும், நிகழ்வு இடங்களும் நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை தரும். சில கதைகளை படித்த பின், மனதிற்கு தெளிவு கிடைக்கிறது. வாசிக்க வேண்டிய சிறுகதைகளின் தொகுப்பு நுால்.– விநா