/ கதைகள் / நேற்று இல்லாத மாற்றம்

₹ 200

சமூக நடப்புகளில் கேட்டது, பார்த்ததை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள 29 சிறுகதைகளின் தொகுப்பு நுால். தாயாகும் மகளுக்கு உதவ அமெரிக்கா செல்லும் பெண்ணின் நடவடிக்கை, ‘மாமியார் ஜாக்கிரதை’ கதையில் சிரிக்க, சிந்திக்க வைக்கிறது. கல்லுாரி தோழியர் கனவு நனவானதை, ‘கிளிஞ்சல்’ கதை நம்பிக்கை ஊட்டுகிறது. காட்டை சுற்றி காட்டும், ‘மயூரி’ கதை, இயற்கையை நேசிக்க வைக்கிறது. உரையாடலில் கிடைக்கும் அருமை, பெருமைகளை தந்து, ‘திருமண வரவேற்பு’ கதை உற்சாகம் ஏற்படுத்துகிறது. அப்பாவை தேடும் குழந்தையின் ஏக்கத்தை, ‘அப்பா ஒரு ஹீரோ’ கதை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. இஸ்திரி போடும் இளைஞர் நேர்மையை, ‘அர்த்தம் புரிந்தது’ கதை உணர்த்துகிறது. வித்தியாசமான கதைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை