/ கதைகள் / நினைவு யாழ்

₹ 170

நகர வாழ்வில் அன்றாடம் காணும் மனிதர்களை கதாபாத்திரங்களாக்கி படைக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுருதி பேதம், கருணை, வதம், கானல் மாற்றங்கள், பூமராங், காத்திருப்பு, தவிப்பு, வேர்ப்பூக்கள், நிறம் மாறும் முகங்கள், உடைந்து போகும் பிம்பங்கள், மாற்றம், இங்கே கூண்டுகள் உடைக்கப்படும் உட்பட 17 தலைப்புகளில் அமைந்துள்ளன. வாழ்வில் அன்றாடம் திடீரென குறுக்கிட்டு பதற்றம் ஏற்படுத்தும் சம்பவங்களை கொண்டு கதைகள் படைக்கப்பட்டுள்ளன. நகர வாழ்வின் நிச்சயமற்ற தன்மை, எதிர்காலத்தின் அவலம் என பல்வேறு பொருண்மைகள் சார்ந்து அமைந்துள்ளன. உறவுகளுக்கிடையே குரூர மனப்பான்மை, மனக்குமுறல், முரண்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்புகளும் உள்ளன. நெகிழ்வு தரும் கதைகளின் தொகுப்பு நுால். – ராம்


முக்கிய வீடியோ