/   பொது / நிழல் வெள்ளிவிழா சிறப்பிதழ்                      
நிழல் வெள்ளிவிழா சிறப்பிதழ்
திரைப்படம், நாடகம் பற்றிய செய்திகளை தொகுத்து தரும் நுால். அயல்நாட்டு சினிமா தயாரிப்புகள், அதிகாரத்தை கேள்விக்குள்ளாகும் படைப்புகள் குறித்த விபரங்கள் உள்ளன. பிரபலங்களின் பேட்டியும் உள்ளது. திரைப்படக்கலையின் முக்கியத்துவம் குறித்து தரப்பட்டுள்ளது. உலக அளவில்அதிகார மையங்களை எதிர்த்து போராடும் சினிமாக்கலை குறித்த பார்வையை முன்வைக்கிறது. இசைத்தட்டு உருவான வரலாற்றை விவரிக்கும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இசையை பதிவு செய்யும் நுட்பத்தில் துவங்கி அது அடைந்த மாற்றங்களையும், தமிழகத்தில் புகழ் பெற்றதையும் தருகிறது. சினிமா தொடர்பான நவீன தொழில் நுட்ப விபரங்களை அறிய வைக்கிறது. சமூக மாற்ற சினிமா குறித்த தகவல்களை உடைய நுால். – ஒளி







 
 
      