/ கட்டுரைகள் / ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ‘சிந்துார்’ என்ற பெயரில் இந்தியா கொடுத்த பதிலடியை விவரிக்கும் நுால். தாக்குதலின் தொடர்ச்சியாக நடந்த அரசியல் நிகழ்வுகள், ராணுவ திட்டமிடல், வியூகங்கள், உலக நாடுகளின் நிலைப்பாடு குறித்து விரிவான செய்திகள் தரப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் மூர்க்க செயலை கண்ணீருடன் விவரிக்கிறது. இதற்கு ராணுவம் தந்த பதிலடியாக ஆபரேஷன் சிந்துார் தாக்குதலை விவரிக்கிறது. ஏற்கனவே புல்வாமா, பாலகோட்டில் கிடைத்த பாடங்களை வைத்து, ராஜதந்திரத்துடன் எதிரியை கையாண்ட திறன் பற்றி கூறுகிறது. பதிலடி தந்த தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட அமைதி குறித்தும் கூறப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் அறிவித்த நாள் வரை நடந்த நிகழ்வுகளை தொகுத்து கூறும் நுால். – டி.எஸ்.ராயன்