/ பொது / ஒரு வாசகம் ஒரு மனிதர் ஒரு சம்பவம்

₹ 220

பேச்சு, எழுத்து, சினிமா, அரசியல், பொது வாழ்வில் பிரபலமாக விளங்குவோர் நினைவில் பதிந்துள்ள அனுபவங்கள் பற்றிய நுால். மனதை கவர்ந்த வாசகம், மறக்க இயலாத மனிதர், நினைவில் இருக்கும் நிகழ்வு என வகைப்படுத்தி சுவாரசியம் குன்றாமல் தொகுத்து தரப்பட்டுள்ளது. வாழ்வின் திசையை மாற்றும் சக்தி ஒரு சொல்லுக்கும், சம்பவத்துக்கும், நிகழ்வுக்கும் உண்டு என்பதை பிரபலங்கள் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் இமையம், யூமா வாசுகி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உட்பட, 27 பேருக்கு அனுபவம் வழி பதிந்த நினைவு பதிவாகி உள்ளது. ஒவ்வொருவரின் ரசனையும், அணுகுமுறையும் மாறுபட்டிருக்கின்றன. ஆனால், இதயத்தை வருடி மென்மை ஊட்டுவதை படிக்கும் போது உணர முடிகிறது. – மதி


சமீபத்திய செய்தி