/ கட்டடம் / புறம்போக்கு நிலங்கள்
புறம்போக்கு நிலங்கள்
பு றம்போக்கு நிலம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படைக்கப்பட்ட நுால். புறம்போக்கு என்பது எதற்கும் பயன்படாத நிலம் என்ற கருத்தை மாற்றுகிறது. அது, மக்கள் வாழும் இடம் சார்ந்துள்ளதையே குறிக்கிறது. வருவாய்த்துறை பதிவேடுகளில் புறம்போக்கு நிலத்தின் பதிவு அடிப்படை விபரத்தையும் தெளிவுபடுத்துகிறது நன்செய், புன்செய், மானாவாரி, மண் வகை குறித்த விளக்கம் கேள்வி – பதில் வடிவில் சொல்லப்பட்டுள்ளது. நில உரிமை, பயன்பாடு மாற்றம் குறித்த விளக்கங்கள் பயன்தரும் வகையில் சொல்லப்பட்டு உள்ளன. நிலம் தொடர்பாக அரசு சலுகைகள் பற்றிய விபரம், முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. நிலம் பற்றிய புரிதலை எளிய நடையில் பகிரும் நுால். – ஊஞ்சல் பிரபு




