/ வர்த்தகம் / பங்குச் சந்தை ரகசியம்

₹ 70

குதிரைப் பந்தயங்களைப் போன்று, பங்குச் சந்தைகளிலும் லட்சங்களைப் பார்த்தவர்களும் உண்டு. அனைத்தையும் "கோட்டை விட்டு ஓட்டாண்டியாக நடுத் தெருவில் நிற்பவர்களையும் நாம் காண இயலும். பங்குச் சந்தை என்பது சூதாட்டம் இல்லை. மாறாக, பங்கு வணிகத்தின் நெளிவு சுளிவுகளைக் கண்டறிந்து, நம் முதலீட்டினை முறையாகத் திட்டமிட்டு, நமக்கு நாமே ஒரு சில கட்டுப்பாடுகள், வரம்புகள், வரைமுறைகளை வகுத்துக் கொண்ட பின்னர் செயலில் இறங்கும்போது, நிச்சயமாக வெற்றியாளராகத் திகழ முடியும்! மேலும், "டைமிங் எனப்படும் "கால நிர்ணயம் என்பதே மிக முக்கியமான ரகசியம், அதாவது ஒரு பங்கை எப்போது, எந்த விலையில் வாங்குவது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைப் போலவே எத்தருணத்தில், எந்த விலைக்கு அதை விற்று லாபம் ஈட்டுவது என்பது பன்மடங்கு முக்கியம்.இத்தகைய தகவல்கள், 11 கட்டுரைகள் வாயிலாக நேரிடையாக அறிவுரைகள் வழங்கும் பாணியில் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், பங்குச் சந்தைத் தில்லு முல்லுகளை ஒழித்துக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள "செபி எனும் அமைப்பு, பேப்பரில்லாத எலெக்ட்ரானிக் "டிமேட் அக்கவுன்ட் வசதிகள், நேசக்கரம் வழங்கிடும் பங்குத் தரகர்கள், அவர் தம் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெறாதது இந்நூலின் பெரியதோர் குறைபாடாகும்"பங்குச் சந்தையில் வெற்றி வாய்ப்புகள் என்றதோர் தலைப்பே இந்நூலுக்கும் பொருத்தமாக இருக்கும்.


முக்கிய வீடியோ