/ ஜோதிடம் / பராபவ வருஷத்திய துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம்

₹ 280

திதி, வாரம் (கிழமை), நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உள்ளடக்கியது பஞ்சாங்கம். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டில் பஞ்சாங்க காலம் துவங்கும்; பங்குனி கடைசி நாளில் நிறைவு பெறும். பஞ்சாங்கம் பார்த்து தான் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை துவங்குவர். தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட்., வெளியிட்டுள்ள இந்த பஞ்சாங்கம், 472 பக்கங்கள் உடையது. பஞ்சாங்க கணித மணி பி.ஸ்ரீனிவாஸன் திருக்கணித முறையில் கணித்துள்ளார். பராபவ வருஷத்தின் பலன், முகூர்த்த நாட்கள், கிரகண நாட்கள், பண்டிகை நாட்கள், மாத விசேஷங்கள், வாஸ்து நாட்கள், எந்த காரியத்தை எப்போது துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன. மற்ற பஞ்சாங்கங்களில் மாதத்திற்கு இரண்டு பக்கங்களுக்கு மேல் விசேஷங்கள் இருக்காது. இதில், மாதத்துக்கு 31 பக்கங்கள் ஒதுக்கப்பட்டு சிராத்த திதி, அபராஹணம் (ஒரு நாளின் பின் நேரம்) சூரிய உதயம், அஸ்தமன நேரம், தினந்தம் (மாலை நேரத்தின் முடிவு காலம்) சந்திரோதயம், சந்திராஸ்தமனம் ஆகியவை நாழிகை, அதற்குரிய நேரத்துடன் (மணி) தரப்பட்டுள்ளது. இதை, வேறு எந்த பஞ்சாங்கத்திலும் காண முடியாத புதுமை. இது தவிர லக்ன இருப்பு மாத, தேதி வாரியாக தரப்பட்டுள்ளது. குடும்பத்தில் குழந்தை பிறந்தால் என்ன லக்னத்தில் பிறந்தது என தெரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக இந்த பட்டியல் அமைந்துள்ளது. லக்னம் கணக்கிடும் முறையும் தரப்பட்டுள்ளதால் லகுவாக நாமே கணித்து விடலாம். மாந்தி உதய அட்டவணை, தசா புத்தி காணும் முறை, ஒவ்வொரு மாதத்தின் கிரக நிலை தனித்தனி பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள நகரத்துக்கு நகரம் சூரிய உதய நேரம் சற்று மாறுபடும். எனவே சென்னை, திருச்சி, தஞ்சாவூர் மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் பெங்களூரு, டில்லி நகரங்களில் நேரமும் மாத வாரியாக இணைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் வேறு எந்த பஞ்சாங்கத்திலும் இல்லாத புதுமை. இந்த பஞ்சாங்கத்தை வீட்டில் வைத்திருப்பதே பெருமை தான். – தி.செல்லப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை