/ கதைகள் / பசி

₹ 266

எழுத்தாளர் பிரபஞ்சன், 30 ஆண்டுகளுக்கு முன், வந்தனா அலமேலு என்ற புனைபெயரில் எழுதிய நாவல் நுால். கதைநாயகியே கதை சொல்லி சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்னையின் தீவிரம் புரிந்தும், தீர்வு காணப்படாத பெண்ணின் தேவைகளை ஆதங்கத்தோடு முன்வைக்கிறது. கெடுபிடிகள் கண்முன் நடப்பது போலவே காட்சிப்படுத்துகிறது. பெண்ணிய உரிமைக்குரலாக ஒலிக்கிறது. ஆண்களின் மேலாதிக்கத்தால், ஒடுக்கப்பட்டு பரிதவிக் கும் பெண்ணின் மனவலியை வடுக்களாக புனைந்து வெளிப்படுத்துகிறது. பெண்களை இழிவுபடுத்தும் சமூக நடைமுறைகளை முன்வைத்து சாடுகிறது. குடும்ப வாழ்வில், ஆண்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை பெரும்பங்கு வகிப்பதை விவாதிக்கிறது. பெண்மை எழுச்சியை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி