/ கட்டுரைகள் / பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம்
பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம்
தமிழை பக்தியின் தாய்மொழி என்று போற்றுவர். பழந்தமிழர், 3,000 ஆண்டுகளாக பக்தியை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதை, 33 ஆய்வுக் கட்டுரைகளில், இந்த நூல் அழகுடன் விளக்குகிறது.தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் சமயச் செய்திகளை ஆதாரப் பாடல்களுடன் கட்டுரைகள் அருமையாய் விளக்குகின்றன.இயற்கை, விலங்கு, அணங்கு, பெருதெய்வம், சிறு தெய்வம், பலியிடம், நீத்தார் சடங்குகள் போன்ற பல தலைப்புகளில் ஆய்வுகள், செய்திகளை அள்ளித் தருகின்றன. பக்தியுடன் படிக்க வேண்டிய பழந்தமிழ் ஆய்வு நூல்.முனைவர் மா.கி.ரமணன்