/ பெண்கள் / பெண் வாழப்பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள்!

₹ 60

கால அடிப்படையில் காதல், காமம், பெண் மதிப்பு, இல்வாழ்க்கை போக்கை அலசும் நுால். கடவுள் படைப்பில், ஆணுக்குப் பெண் அடிமை என்பது தவறானது என குறிப்பிடுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில், தாயே முதலிடம் பெறுவதை சுட்டிக்காட்டுகிறது. உயிரை உருவாக்கும் அபூர்வ சக்தியாக இருப்பதால் பெண், தெய்வம் என விளக்குகிறது. உலகில் எல்லா உயிரினங்களிலும் பெண் தான் ஆணை தேர்வு செய்வதை குறிப்பிடுகிறது. சங்க காலத்தில் நிலவிய சடங்கற்ற திருமணம் முறையை எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரத்தில் தான் சடங்கு நடந்தது காட்டப்பட்டுள்ளது. பசிக்கு விருந்தாக, நோய்க்கு மருந்தாக அமைந்து உதவும் பெண்மை உலகையே ஆள்கிறது என போற்றும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


சமீபத்திய செய்தி