/ புத்தக மதிப்புரை / பிசினஸ ் L போர்ட்!

₹ 220

தொழில் முனைவோர் எப்படி செயல்பட வேண்டும்; தொடங்கும் முன் செய்ய வேண்டியவை என்ன என்பதை சுவைபட விளக்கும் நுால். சர்க்கஸில் ஒரு ரிங் மாஸ்டர் சிங்கம், யானை, கரடி போன்ற விலங்குகளை அடக்கி ஆள்வது போல் தொழில் முனைவோரும் பணியில் தான் ஈடுபட வேண்டும் என்கிறது. கொள்முதல், விற்பனை, ஊழியர்களிடம் வேலை வாங்குதல் என மேலாண்மைத் திறனுடன் இயங்க வலியுறுத்துகிறது. சந்தை தேவையை பூர்த்தி செய்ய முடியுமா அதற்கான தனித் திறன்கள் என்ன என்ற கேள்விகளை நடுநிலையோடு கேட்க கூறுகிறது. வியாபாரத்தில் உள்ள தடைகள் அல்லது தடங்கல்களை நீக்க வழி கூறுகிறது. புதிதாக தொழில் துவங்க நினைப்போருக்கு பயனுள்ள புத்தகம். – இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை