/ கட்டுரைகள் / போதும் என்ற மனமே...

₹ 170

புத்தகங்களில் படித்த சுவாரசியம் மிக்க தகவல்களை தொகுத்து தந்துள்ள நுால். நல்லெண்ணத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 30 புத்தகங்களில் சேகரித்ததாக குறிப்பிடுகிறது. பலி கொடுப்பதால் பாவங்கள் பெருகும் என்கிறது. ஆதிசங்கரர் முதல் சாய்பாபா வரை மகான்களின் கருத்துகள் தரப்பட்டுள்ளன. உயிர் பலியை தவிர்ப்பதன் அவசியத்தை கூறுகிறது. சொர்க்கம் விண்ணில் இல்லை; மண்ணில் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வதில் இருப்பதாக குறிப்பிடுகிறது. நகைச்சுவை மிளிர, தமிழ் சினிமா பற்றி பெருந் தலைவர் காமராஜர் கூறிய கருத்து சுவாரசியமாக உள்ளது. வள்ளுவரின் குறள் குறித்த செய்திகள் பலவும் தரப் பட்டுள்ளன. சுவாரசியமிக்க தகவல்கள் அடங்கிய நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை