/ பொது / பிரபலமானவர்களின் விலாசங்கள்
பிரபலமானவர்களின் விலாசங்கள்
தமிழகத்தில் வசிக்கும் பிரபலமானவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களின் தொகுப்பு நுால். நடிகர், நடிகையர் உட்பட அனைத்து துறையிலும் புகழ் பெற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் கையேடாக விளங்குகிறது.பிரபல மருத்துவர், ஆன்மிக பிரமுகர், ஜோதிடர், தமிழறிஞர், பதிப்பகம், ஓவியர் என, 67 தலைப்பு களில் தொடர்பு விபரம் தொகுக்கப்பட்டுள்ளது. திரைப்பட இசையமைப்பாளர், இயக்குனர், பத்திரிகையாளர், எழுத்தாளர் விபரங்களும் உண்டு.பிரச்னைகளை பேசும் அரசியல் தலைவர்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்களை தொடர்பு கொள்ளும் எண்களும் பகிரப்பட்டுள்ளன. எங்கு வசித்தாலும் எண்ணிய உடன் முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு பேச உதவும் நுால்.– ராம்