/ கட்டுரைகள் / புதுச்சேரி கடற்கரைகள்
புதுச்சேரி கடற்கரைகள்
அமைதியாக ஓய்வெடுக்க உகந்த புதுச்சேரி கடற்கரைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நுால். அலை சறுக்கு சாகசம் செய்வதற்கு ஆரோவில் கடற்கரை, அதிகாலை சூரிய உதயம் எழிலை காண உகந்த ‘ராக்’ கடற்கரை சிறப்புகளை எடுத்துரைக்கிறது. படகு சவாரிக்கு பாரடைஸ், இதமான சூரிய குளியலுக்கு செரினிட்டி கடற்கரை, அமைதியாக காதலர் உலாவ ஏற்ற கடற்கரையையும் குறிப்பிடுகிறது. புதுச்சேரி கடற்கரையின் சிறப்பு, உலக அளவில் அது சுற்றுலா பயணியரை ஈர்ப்பதற்கான அம்சங்களை விவரிக்கிறது. புதுச்சேரி வங்க கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரைகளின் தனித்துவத்தையும் எடுத்துரைக்கிறது. சுற்றுலாவாக புதுச்சேரிக்கு செல்வோருக்கு ஏற்ற தகவல்களை தருகிறது. புதுச்சேரி கடற்கரையின் சிறப்பை கூறும் நுால். – மதி




