/ புத்தக மதிப்புரை / புத்தகத்தின் கதை

₹ 199

புத்தக தயாரிப்பு பற்றி சிறுவர் – சிறுமியர் அறியும் வண்ணம் கதை போல் அமைந்துள்ள நுால். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் உள்ளது. முதலில் புத்தகம் உருவாக்கம் பற்றிய எண்ணம் எழுத்தாளர் மனதில் எழுவதை சிந்தனையாக தருகிறது. அந்த சிந்தனையை செயல்படுத்தும் விதம் பற்றி எடுத்துரைக்கிறது. சிந்தனை சொற்களாக காகிதத்துக்கு மாறி அது சரிபார்க்கப்பட்டு, பதிப்பாளருக்கு அனுப்பப்படுகிறது. பதிப்பாளர் அந்த ஆக்கத்தை கூர்ந்து படித்து மெரு கேற்றும் விதமாக திருத்தம் செய்வதை கூறுகிறது. திருத்திய படைப்பில் அழகிய ஓவியங்கள் இணைக்கப்பட்டு அச்சிட்டு புத்தகமாக மாறுவதை உரைக்கிறது. ஒரு புத்தகம் தயாராகி வாசகர்களிடம் செல்வது வரை கூறும் நுால். – மதி