/ கதைகள் / புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி
இரண்டாம் உலகப் போரில், மலேஷியா – இந்தோனேஷியா நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கூறும் நாவல். போர் காலத்தில் மதுரையில் வளர்ந்து மலேஷியா செல்லும் கதாநாயகன் வாயிலாக, பல நாடுகளில் நடக்கும் சம்பவங்களுடன் கதை நகர்கிறது. பர்மாவை மீட்க கொரில்லா படை குழுவில் சேர்ந்த கதாநாயகன் என்ன ஆனார் என விடை காண்கிறது. புலம் பெயர்ந்த தமிழர் வாழ்க்கை சூழல், போராட்டங்கள், மரணத்தை எதிர் கொண்ட தருணங்களை திகில் தரும் வகையில் கூறுகிறது. இந்திய ராணுவத்தில் சேரும் சிலரின் செயல்பாடுகள், போரை வெவ்வேறு வகைகளில் கையாண்டதாக கூறுகிறது. ராணுவத்தில் நடக்கும் ஊழல், கோஷ்டி பூசல்களையும் எடுத்துரைக்கிறது. போரில் தமிழர்களின் பங்கு எவ்வளவு உயர்வாக பார்க்கப்பட்டது எனவும் எடுத்துரைக்கும் நாவல் நுால். – டி.எஸ்.ராயன்