/ வர்த்தகம் / சேல்ஸ் சைக்காலஜி
சேல்ஸ் சைக்காலஜி
விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி விரிவாக தகவல்களை தரும் நுால். விறுவிறுப்பாக வளரும் விஞ்ஞானமும், பரபரப்பாக விரியும் தொழில்நுட்பமும் உலகை வேகமாக மாற்றி வருவதை சுட்டிக்காட்டுகிறது. வாடிக்கையாளர் தேவையை தீர்க்கும் வழிகள், வாங்க விரும்பும் பொருட்களை அறிய தொழில்நுட்பம் வாயிலாக தீர்வு காண்பது பற்றி விளக்குகிறது. வாடிக்கையாளர் மன ஓட்டம் அறிந்து விற்பனை செய்வது முக்கியம் என அறிவுறுத்துகிறது. விற்பனை வியூகம், மதிப்பு உருவாக்குவதில் திட்ட மிடல், வார்த்தைகளால் வசீகரம் செய்தல், பங்காளி களுக்குள் ஏற்படும் சண்டையை தீர்ப்பது மற்றும் விற்பனையை உயர்த்த உதவும் உத்திகள் பற்றி அறிய தருகிறது. பொருட்களை சந்தைப்படுத்த அரிய ஆலோசனைகள் தரும் நுால். – புலவர் சு.மதியழகன்