/ சட்டம் / சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
சாணக்கியரின் சமூக நீதி, ராஜ நீதி ஆகியவற்றை விளக்கும் நுால். பூவின் வாசம் போல், விறகில் நெருப்பு போல் கடவுள் உடலில் உறைவதாக குறிப்பிடுகிறது. தலை எழுத்தை மாற்ற முடியாது என்கிறது. திடமான நோக்கம் உடையவன் சாதிப்பான் என்கிறது. கோபம் – எமன், காமம் – நரகம், அறிவே காமதேனு, திருப்தி தான் நந்தவனம் என அறிவிக்கிறது. சமூகத்தில் தாயே தெய்வம்; தந்தை வழிகாட்டி. அன்பாக-, -உண்மையாக இருப்பவளே மனைவி. அடுத்தவரை ஏமாற்றாதவரே உயர் குடியினர். ராஜ குருவின் இலக்கணம், உளவு பார்த்தலின் இன்றியமையாமை, ஆலோசனை சபை, அரசன் கடமைகள், அரசு மேலதிகாரி பணிகள் விளக்கப்பட்டுள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.– முனைவர் கலியன் சம்பத்து