/ ஆன்மிகம் / சர்வம் சக்திமயம்
சர்வம் சக்திமயம்
பெண்ணைத் தெய்வமாக போற்றும் பூமி நம் நாடு. சர்வமும் சக்தி மயம் என்று கொண்டாடுவது நம் வழக்கம். சக்தி வழிபாட்டிற்கெனவே ஆடி மாதம் என ஒரு மாதத்தை ஒதுக்கி அம்மன் வழிபாடு நடத்துகிறோம். நவராத்திரி விழாவின்போது சக்தியை ஒன்பது விதமாக அலங்கரித்து கொண்டாடுகிறோம்.பசித்த வயிற்றுக்குச் சோறு தான் தெய்வம், வலிக்கின்ற மனசுக்குத் தீர்வு தான் தெய்வம். சகமனிதர்களிடம் பகிரவும் பகரவும் இயலாததைச் சொல்வதற்கே இறைத் தலங்கள நோக்கிப் பயணிக்கிறோம்.அத்தகைய 40 சக்தி இறைத்தலங்கள் குறித்து அனுபவ பூர்வமாக உணர்ந்து எழுதப்பட்டுள்ள நுால். புனித தலங்களுக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் உணர்வு பூர்வ எழுத்துக்கள். அம்மையை எண்ணி உருக வைக்கும். ஆன்மிகவாதிகளுக்கு அற்புதமான பொக்கிஷம்.– ராம்