/ பெண்கள் / சாதனைப் பெண்கள்
சாதனைப் பெண்கள்
சமூக உயர்வுக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரலாறு படைத்த பெண்களை அறிமுகம் செய்யும் நுால்.தர்மத்தை காக்கும் கடமையில் வீரமங்கையாக செயல்பட்டது, மருத்துவத்தில் பணிகளில் சிறப்பு கவனம், சுதந்திரப் போரில் தியாகம், சமூக முன்னேற்றத்தில் முன்னோடியாக செயல்பட்டது, இயற்கை பாதுகாப்பில் அரணாக விளங்கியது என முறையாக தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரலாறு படைத்த சாதனைப்பெண்களை அறிமுகம் செய்கிறது. உழைப்பின் மேன்மையை விவரிக்கிறது. நாட்டு வளர்ச்சியுடன் கொண்டிருக்கும் உறவை புலப்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரையும் உரிய படங்களும் தெளிவான தகவல்களும் தரப்பட்டுள்ளன. நாட்டின் உயர்வுக்கு வாழ்வில் அரிய தியாகங்கள் செய்துள்ள பெண்களின் வரலாறாக மலர்ந்துள்ள நுால்.– ராம்