/ புத்தக மதிப்புரை / சத்தியத்தின் குரலும் குறலும்

₹ 100

காந்திஜி வாழ்வில் நடந்த நிகழ்வுகளை திருக்குறளுடன் ஒப்பிடும் நுால். தாத்தா உத்தம சந்திரகாந்தியின் கொள்கைப் பிடிப்பு, தந்தை கரம்சந்த் காந்தியின் மன உறுதி, தாய் புத்தலிபாய் உண்ணாநோன்பும், காந்திஜிக்கு இயற்கையாக அமைந்த கொடை என்கிறது. இளமையில் காந்திஜியிடம் கூடா நட்பு, உணவுப் பழக்கம் இருந்ததை சுட்டிக்காட்டி சரியானதை உரைக்கிறது. தந்தை உயிர் பிரியும் நேரத்தில் படுக்கையறையை நாடியது, மறக்க முடியாத அவமானமாக இருந்தது என்கிறது. பெண்ணிடம் தவறாக நடக்க இருந்த நிலையில், நண்பர் எச்சரித்ததால் தன்னிலை உணர்ந்த தருணத்தை குறிப்பிடுகிறது. நிகழ்கால நிகழ்வுகளையும் காந்திஜி வாழ்வுடன் பொருத்தி கூறும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை