/ பொது / ஷோலே நீறு பூத்த நெருப்பு
ஷோலே நீறு பூத்த நெருப்பு
நடிகர்கள் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி, ஹிந்தியில் வர்த்தக ரீதியாக திரும்பி பார்க்க வைத்த ஷோலே திரைப்படம் குறித்த நுால். வெளியான உடன் வரவேற்பு பெறவில்லை. மூன்றாவது வாரம் முதல் ரசிகர்களை திரையரங்கில் குவிய வைத்தது. நுாறு திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டது.படத்தின் கதை உருவான விதம், நடிகர், நடிகையர் தேர்வு என பல விஷயங்களை பேசுகிறது. வசனம், காட்சி, உடல்மொழியால் தனித்துவம் பெற்றுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்கள் முதல், தொழில்நுட்ப உபகரணங்கள் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.இந்த படத்தை தழுவி உருவாக்கப்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி படங்களின் பட்டியலையும் தருகிறது இந்த நுால். – டி.எஸ்.ராயன்