/ பயண கட்டுரை / சிகரங்களுக்கு அப்பால்
சிகரங்களுக்கு அப்பால்
மலையேற்ற சாதனை அனுபவத்தை சொல்லும் நுால். எண்ணத்தை ஒருங்கிணைத்து தீவிரமாக செயல்பட்டால் சாதிக்கலாம் என நம்பிக்கை ஊட்டுகிறது. மலையேற்ற பயணங்களின் அனுபவமாக மலர்ந்துள்ளது. திடமனதுடன் செயல்படுவதற்கு உரிய படிப்பினையை தரும் வகையில் உள்ளது. உலகின் உயர்ந்த மலை உச்சிகளில் ஏறிய சாகச அனுபவங்களை சுவாரசியம் குன்றாமல் தருகிறது.மலையேற்ற பயணங்களில் எதிர்கொள்ளும் பிரச்னை கள், அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள் பற்றி செயல்பாடு அடிப்படையில் கருத்தை பகிர்ந்துள்ளது. மலையேறும் ஆர்வம் துவங்கி பயணங்களை திட்டமிடுவது வரை விபரமாக கருத்துக்கள் உள்ளன. கடின முயற்சிகளை மேற்கொள்வதற்கான திட சிந்தனையை வளர்க்கும் வகையிலான நம்பிக்கை நுால்.– மதி