/ கவிதைகள் / சிந்தனைச் சிற்றருவி

₹ 150

தாய்மொழி, தாய்மை, கல்வி, காதல், திருமணம், இல்லறம், தத்துவம், அறிவுரை, தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘நாளும் தமிழ் நாவில் தவழத் தேனாய் இனிக்கும்; அது வானாய் வளர்க்கும்!’ என தாய்மொழியின் இனிமையை கூறுகிறது. ‘ஆராயக் கற்றால் அறிவு ஊறுமே, சீர் பெறும் நமது சிந்தனை அருவியே, எந்த வயதிலும் எழுத இயலும் ஏந்தும் பேனாவை எழுத நினைத்தால்’ என கல்வி மேன்மை கூறப்பட்டுள்ளது. ‘பூங்காவனத்தில் பூத்துக் குலுங்கும் துாங்கா நகரம் துாய்மையின் சிகரம்’ என சிங்கப்பூர் துாய்மையை விவரிக்கிறது. புத்தக வாசிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது. கவிதை புனைய விரும்புவோருக்கும், சிறுவர்களுக்கும் பயன்படும் நுால். –- புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை