/ கவிதைகள் / சிந்தனையில் மலர்ந்த கவிதைகள்
சிந்தனையில் மலர்ந்த கவிதைகள்
சிந்தனையில் உதித்தவற்றுக்கு வடிவம் கொடுத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘அம்மா’ என்ற தலைப்பில் துவங்கி, ‘படி படி’ என்பது முடிய, 124 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தலைப்புக்கு ஏற்ப ரத்தின சுருக்கமான கவிதைகள் அமைந்து உள்ளன. பல மின்னல் கீற்று போல பளிச்சிடுகின்றன. சமகால நிகழ்வின் பாதிப்புகள் மையக்கருத்தாகியுள்ளன. விவசாயத்தின் மேன்மையை, ‘மானிடர் பசி போக்கும் உன்னத சேவை விவசாயம்’ என பெருமைப்படுத்துகிறது. வளைகாப்பு விழா என்பதை ‘கருவறை குழந்தைக்கு வரவேற்பு’ என்ற சொல்லாட்சியை பயன்படுத்துகிறது. படிப்பின் அவசியத்தை குறிப்பிடுகிறது. சமூக விழிப்புணர்வுக்கு உகந்த கருத்தை பதிவு செய்துள்ள நுால். – வி.ராமலிங்கம்




