/ கதைகள் / சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள்

₹ 100

வீரமாமுனிவரால் எழுதப்பட்ட நகைச்சுவை கதைகளின் தொகுப்பு நுால்.பரமார்த்த குரு ஒரு முட்டாள்; அவருக்கு சீடராக இருந்த அத்தனை பேரும் செய்யும் அலப்பறைகள் படிக்க படிக்க வயிறு குலுங்க வைக்கின்றன. பெரும்பாலும் முன்பே கேள்விப்பட்டவையாக இருந்த போதும் புதிதாக தோற்றம் தருகின்றன. குதிரை முட்டை என பூசணிக்காயை வாங்கியதும், காட்டு வழியில் அது தவறி விழுந்து உடைய, பக்கத்து புதரில் முயல் தாவி ஓடியது கண்டு குதிரைக்குட்டி ஓடுவதாக புலம்புவது சிரிப்பு தருகிறது. இறைச்சி வாசனை முகர, காசு கேட்டவனுக்கு பண வாசனை காட்டியது இன்னொரு சிரிப்பு மழை. குழந்தைகளுக்கு புத்தி சொல்ல ஏற்ற நுால். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை