/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்களுக்கான இராமாயணம்
சிறுவர்களுக்கான இராமாயணம்
கம்ப ராமாயணத்தில் ஆறு காண்டங்களையும் எளிய முறையில் விளக்கும் நுால். ராமாயணம் பிறந்த கதை முதலில் கூறப்பட்டுள்ளது.தசரதனின் வருத்தம் நீங்க புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதும், ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் பிறப்பதும் கூறப்பட்டுள்ளது. சிவதனுசை உடைத்த ராமன் சீதா தேவியை மணப்பதும், பரசுராமனை வெல்வதும் சுவாரசியம் குன்றாமல் உள்ளது.இன்றியமையா செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. படங்கள் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தரும். ஆவலைத் துாண்டும் விதமாக அமைந்துள்ள நுால்.– முனைவர் கலியன் சம்பத்து