/ கட்டுரைகள் / சிட்டுக் குருவி

₹ 125

மகாகவி பாரதியாரின் கட்டுரையில் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ள கவிதைத் தொகுப்பு நுால். மயக்கும் பறவைகள் வசீகரிக்கும் கதையை பின்னுகிறது. விடுதலை, காதல், கடத்தல், வறட்சி, மவுனம், நினைவுகள், பாசம், குழப்பம், அஞ்சல் பெட்டி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 71 கவிதைகள் உள்ளன.ஒரு சிட்டுக்குருவியின் அன்றாட வாழ்வை அழகாக சித்தரிக்கிறது.- அதிகாலை எழுந்து குஞ்சுகளை வளர்ப்பதும் இடம்பெற்றுள்ளது. சிட்டுக்குருவிகளின் கலகலப்பான உரையாடலைத் தெளிவாகப் படம்பிடிக்கிறது. உணர்ச்சியும் வாழ்வும் நிறைந்த சூழலை உருவாக்குகிறது. இயற்கை மீது அழுத்தமாக பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் வர்ணனை திறன், தொகுப்பை இலக்கிய பயணமாக மாற்றுகிறது. எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால்.– வி.விஷ்வா


புதிய வீடியோ