/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீ சங்கர விஜயம்
ஸ்ரீ சங்கர விஜயம்
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வெளிப்படுத்தும் நுால். அவரது உபதேசங்கள், சாதனைகள், தரிசனங்கள், சீடர்கள் மற்றும் பரம்பரையாக நிலைத்த கருத்துக்களை விவரிக்கிறது.ஆதிசங்கரரின் பிறப்பு, குழந்தைப் பருவம், துறவறம், சீடர்களின் தேர்வு மற்றும் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது. அத்வைத வேதாந்தம் பற்றிய விளக்கங்கள், அதில் முக்கிய கருத்துக்கள், பயன்பாடுகள், அதன் தாக்கம், வாத- பிரதிவாதங்கள், வியாக்கியானங்கள் நிறைந்துள்ளன.சங்கரர் இயற்றிய உபநிஷத பாஷ்யங்கள், பிரசித்தமான ஸ்தோத்திரங்கள், மத சீர்திருத்தத்தில் பங்களிப்பு பற்றிய விபரங்கள் உள்ளன. சங்கரரின் தத்துவங்களை புரிய வைக்கும் நுால். –- இளங்கோவன்