/ இசை / நீரில் மிதக்கும் நட்சத்திரங்கள்

₹ 450

வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வு காணும் மையக்கருத்துடன் அமைந்த நாடகங்களின் தொகுப்பு நுால். வயது முதிர்ந்த காலத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போர், மகிழ்ச்சியுடன் வாழ முடிவெடுப்பதை மையப்படுத்தியுள்ள, ‘முற்றுப்புள்ளியும் தொடரும்’ நாடகம், இன்றைய சமூக நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளுவோருக்கு நல்ல பாடம். சுயநலம், ஏமாற்றும் மனநிலை கொண்டோர் செயலை காட்டும், ‘முகவரி கொடுங்கள்’ நாடகம் பாசத்திற்கு முக்கியத்துவம் தர வலியுறுத்துகிறது. உதவும் உள்ளத்துடன் வாழும் கருத்தை முன்வைக்கிறது, ‘அவர் அப்படித்தான்’ நாடகம். வாழ்க்கை பாடங்களை கற்று தரும் வகையிலான நாடக நுால். -– முகில்குமரன்


புதிய வீடியோ