/ கவிதைகள் / சும்மா இருக்கத் தெரியாது
சும்மா இருக்கத் தெரியாது
இறைவன், இயற்கை, நாட்டுப்பற்று எனத் துவங்கி அரசின் திட்டங்கள், உறவுகள், சோகம் என பல்வேறு தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். சமுதாய சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன..‘மரம் வேண்டும் வரம்’ என மனித வாழ்வில் அனைத்து காலகட்டங்களிலும் மரத்தின் பங்கு மிக முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த தேவையை உணராததால் மரமே மேகத்தை பார்த்து வரம் கேட்பது போல் அமைந்துள்ளது. ‘வேடந்தாங்கல் பறவைகள்’ என்ற கவிதையில் மக்கள் பறவைகளை கண்டு மகிழ்கின்றனர். அவை பேதமின்றி, சமத்துவமாய் கூடி வாழ்வதை சொல்கிறது. கல்வியின் அத்தியாவசியத்தை உணர்த்திய காமராஜரை பற்றிய கவிதை இடம் பெற்றுள்ளது.எளிய வடிவிலான கவிதை நுால்.– வி.விஷ்வா